திருகோணமலை மாவட்டத்தில் 71 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரத்தினர் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில்,
இன்றைய நாளிலும் (13.08.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 71 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 55 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் நல் நிகழ்வில் மக்கள் நல் வாழ்வு மையத்தின் ஸ்தாபகர் முருகானந்தம் அண்ணா , செயற்பாட்டாளர் தமிழ்செல்வன் அண்ணா மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ் இல்லமானது கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பாட்டாளிபுரம் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாலா சுதா குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். இது இவர்கள் அமைத்துக்கொடுக்கின்ற 2 ஆவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org