முல்லைத்தீவு மாவட்டத்தில் 64 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது
இன்றைய நாளிலு(06.08.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 64ஆவது இல்லமும் அதே
சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 43 ஆவது இல்லமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் புன்னை நீராவி எனும் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை # கனடா தேசத்தை_சேர்ந்த விமல் & கல்யாணி தம்பதியினர்
வழங்கியிருந்தனர்.
அந்த வகையில் இவ் இல்லத்தினை நிர்மாணித்து வழங்குவதற்கு உதவிய அனைவருக்கும் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்