திருகோணமலை மாவட்டத்தில் 30 குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
இன்றைய நாளிலும் (13.05.2022) “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம்” திருகோணமலை மாவட்டத்தில் பெரியகுளம் கோணேஸபுரி எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றதான 30 குடும்ப உறவுகளிற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை “கமலா அறக்கட்டளை” அமைப்பினர் (சுவிட்சர்லாந்து) வழங்கியுள்ளனர்.
இவர்களிற்கு நன்மையைப் பெற்றுக்கொண்ட குடும்ப உறவுகள் சார்பில் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடுகூட இக் காலத்தில் பலர் உணவின்றி பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பசியாற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
Email_info@jeevaootru.org
Web_jeevaootru.org