முல்லைத்தீவு மாவட்ட கொக்குதொடுவாய் கிராமத்தில் 53 ஆவது இல்லம் வழங்கப்பட்டது
அன்னையர் தினத்திலும் அன்னையின் கண்ணீரை துடைத்தது “ஜீவ ஊற்று அன்பின் கரம்”
ஜீவஊற்று_அன்பின்_கரம் அமைப்பானது நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பாட்டிற்கு வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இன்றைய நாளிலும் (08.05.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 53 ஆவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் எனும் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதியை எமது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் நியூசிலாந்து தேசத்தின் செயற்பாட்டாளர் ரவி அண்ணா வழங்கியிருந்தார். அத்தோடு மக்களிற்கு உதவும் மக்கள் மன்றமும் (ஜேர்மன்) நிதி உதவி வழங்கியிருந்தது.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email–info@jeevaootru.org
Web–jeevaootru.org