திருகோணமலை மாவட்ட பன்குளம் கிராமத்தில் 55 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர்.
அந்தவகையில், இன்றைய நாளிலும் (14.04.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 55 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 35 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் பன்குளம் எனும் கிராமத்தில் கணவனின்றி பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியை அவுஸ்திரேலியா தேசத்தில் வாழ்ந்து வருகின்ற பாலா சுதா குடும்பத்தினர் தங்கள் மகள் மெலானியின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தார்கள்.இவ் இல்லத்திற்கான நிதியை அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற தீபன் அண்ணா ஏற்படுத்தி வழங்கியிருந்தார்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org