கிளிநொச்சி மாவட்டத்தில் 50 ஆவது இல்லம் வழங்கப்பட்டது
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பானது நிர்மாணித்துக் கொடுத்த 50 ஆவது இல்லமானது கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு பிரதேசத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்ற குடும்பத்திற் கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை அமரத்துவமடைந்த P.செல்வராசா அவர்களின் நினைவாக நெதர்லாந்து தேசத்தில் வசிக்கின்ற இவரது மகன் ஜோன்சன் வழங்கியுள்ளார்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org