முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பகுதியில் 49 ஆவது இல்லம் வழங்கப்பட்டுள்ளது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் மக்கள் நல் வாழ்வு மையத்தின் இல்லமானது இன்று (26.03.2022) பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 49 ஆவது இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான் பகுதியில் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 49 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 31 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை லண்டனில் வாழ்கின்றதான பிரம்மன் தர்சினி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
https://youtu.be/wnuI63Hc0xU
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org