திருகோணமலை மாவட்ட மூதூர் கிராமத்தை 39 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் மக்கள் நல் வாழ்வு மையத்தின் இல்லமானது இன்றைய நாளிலும் ( 12.12.2021 ) பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 39 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 22 ஆவது இல்லமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் இலக்கந்தை கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவம் கொண்ட நான்கு பிள்ளைகளை உடைய குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை ஜேர்மன் தேசத்தின் மக்கள் நல் வாழ்வு மையத்தின் இணைப்பாளர் அன்பர் சுப்பிரமணியம் தர்மசீலன் வழங்கியுள்ளார்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org