திருகோணமலை மாவட்ட வரோதயநகர் கிராமத்தில் 34 ஆவது இல்லம் வழங்கப்பட்டுள்ளது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 34 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 18 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (20.11.2021) திருகோணமலை மாவட்டத்தில் வரோதயநகர் கிராமத்தில் கணவனை இழந்து பிள்ளைகளுடன் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உபதலைவர் சீலன்,மதன், அலெக்ஸ் உட்பட மக்கள் நல் வாழ்வு மையத்தின் இலங்கைக்கான பொருளாளர் சுந்தரச்செல்வன் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற துரைசிங்கம் பத்மினிதேவி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். இக் குடும்பத்தினருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு
நிதி உதவிகளை எங்களுக்கு ஏற்படுத்தித்தரும்
அவுஸ்திரேலியா தேசத்தின் மக்கள் நல் வாழ்வு மையச் செயற்பாட்டாளர் “தீபன் சாமி” அவர்களிற்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“தீபன் சாமி” அவர்கள் ஏழை மக்கள் மீது அதிக கரிசனை கொண்டு வாழும் நாட்களில் மக்களின் துயரை முடிந்தளவு துடைக்க தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org