மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளிலும் (16.09.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவற்குடா பகுதியில், COVID 19 தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவிற்கே அல்லல்பட்டுக்கொண்டிருந்த 50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை “இங்கிலாந்து தேசத்தில் இலண்டன் மாநகரில் இயங்கிக் கொண்டிருக்கும் சீயோன் தேவாலயத்தின்
(Zion Church – London) போதகர் மற்றும் திருச்சபை மக்கள் வழங்கியிருந்தனர்.
மக்களின் பசியை போக்கும் மனம் படைத்தவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
Email – info@jeevaootru.org
Web – jeevaootru.org