32 வது நிரந்தர வீடு பயனாளியிடம் கையளிப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரம்
32 வது நிரந்தர வீடு பயனாளியிடம் கையளிப்பு
அமரத்துவம் அடைந்த ஏரம்பு அரவிந்தன் நினைவாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சகோதரி கலைவாணி லோகேஸ் தம்பதிகளின் நிதி அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டின் இன்று (17.09.2021) பயனாளிகளிடம் கையளிக்கப் பட்டுள்ளது.
இவ் இல்லம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 16 ஆவது இல்லமும் ஜீவ உற்று அன்புக்கரத்தின் 32 ஆவது இல்லமும் ஆகும்.
இந்த இல்லத்திற்கு நிதி உதவியை வழங்கிய சகோதரி கலைவாணிக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
இவ் இல்லத்தினை எமது நிறுவன செயலாளர் பிரவீன் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன் ஆகியோர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
நீங்களும் இவ்வாறு எமது உறவுகளுக்கு உதவி கரம் நீட்ட விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். 🙏🙏