ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 24 ஆவது இல்லம் வழங்கப்பட்டுள்ளது
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 24 ஆவது அன்பின் இல்லம் இன்றைய நாளிலும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பாட்டாளிபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கு சுவிட்சர்லாந்தில் வாழ்கின்ற திரு திருமதி சிவநேசன் மங்கை, பிள்ளைகளான Dr. சிவாஜினி மற்றும் அருண் தாவீது என்போர் தேவையான நிதியினைச் வழங்கியிருந்தனர்.
இவ் இல்லத்தினை , பெறுநரிடம் அமைப்பின் உபதலைவர் s.s.சீலன் கையளித்துள்ளார்.
சகல விதத்திலும் நிதி உதவியை வழங்கிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org