எழுபது குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள்வழங்கப்பட்டது.
எழுபது குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக மக்கள் நல்வாழ்வு மையத்தினரால் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் திகிலிவெட்டை பகுதியைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை நியூசிலாந்து தேசத்தில் வசிக்கும் சகோதரன் ஜெயக்குமார் சகோதரி சீத்தா தம்பதியினர் தமது செல்வ புதல்வி அரணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தனர்.
இவ் உதவியை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் மட்டக்களப்பு மாவட்ட பணியாளர்கள் சாயி மற்றும் திலீப் ஆகியோர் இதனை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்தனர்.
மற்றும் ஒரு நிவாரண உதவி முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் பிறந்த தினத்தை கொண்டாடும் அரணியை நாமும் வாழ்த்துகின்றோம்.
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள எமது சமூக ஊடகங்களில் மூலமாக இணைந்திருங்கள்.
FACEBOOK
https://fb.watch/4EbwZID3f4/
YOUTUBE
https://youtube.com/channel/UCvFMUNiNcNSGtHAQP-YsPGA
WEBSITE
http://jeevaootru.org