இன்றைய நாளில் புதிதாக அமைக்கப்பட்ட ஜீவ ஊற்று அன்பின் இல்லம் பயனாளிக்கு வழங்கப்பட்டது
எம் உறவுகளை வாழ வைப்போம்.
தாயக உறவுகளின் இதயத்துடிப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (20.03.2021) புதிதாக அமைக்கப்பட்ட ஜீவ ஊற்று அன்பின் இல்லம் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு இந்த உதவி வழங்கப்பட உள்ளது.
இதற்கான நிதி அனுசரனையை நெதர்லாந்து சுவிஷேச தரிசன சபையில் அங்கத்தினராக இருக்கும் Lorence Briyan அவர்கள் வழங்கியிருந்தார்.
நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிர்வாக உறுப்பினர் சுந்தர் ஆகியோருடன் தென்மராட்சி பணியாளர் சகோதரன் அன்ட்றூ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்தும் எமது முகநூல் பக்கத்தை Like செய்து இணைந்திருந்திருங்கள்