எண்பது குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
எண்பது குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் ஆலிம் சேனை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை திரு சதானந்தம் (சுவிஸ்) , திருமதி மங்கையம்மா( சுவிஸ்) மற்றும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் உறுப்பினர் சகோதரன் ஜெயக்குமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
உதவிகளை ஜீவ ஊற்று அன்பின் கரம் திருகோணமலை பணியாளர்கள் ஒழுங்கு செய்து வழங்கியிருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
அத்துடன் மேலும் இது போன்ற உதவிகள் தேவையான நிலையில் தாயக மண்ணில் பலர் இருப்பதால் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.