குடும்பஸ்தர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் வவுனியா மாவட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சுய தொழில் செய்வதற்கு திறமை இருந்தும் மூலதன வசதி அற்று இருந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்த உதவி வழங்கப்பட்டது.
லண்டன் தேசத்தில் வசிக்கும் திரு திருமதி செல்வா றூபா தம்பதியினரின் நாப்பதாவது திருமண திருமண ஆண்டை முன்னிட்டு அவர்களே இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சகோதரன் இராஜன் இவ் உதவியை ஒழுங்கு செய்து வழங்கியிருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.