கிளிநொச்சி மாவட்ட கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசத்தில் கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் ஆவார்கள். உதவி திட்டத்தை தமிழ்கொடி அமைப்பினர் ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்தனர்.
ஜீவ ஊற்று அன்பின் கரம், மக்கள் நல்வாழ்வு மையம், மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம் ஆகியன இணைந்து இவ் உதவியை வழங்கியிருந்தது.
தொடர்ந்தும் எமது பணிகள் வேகமாக இடம்பெற காத்திருக்கிறது.
நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.