திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் TENT (படங்கு) வழங்கி வைக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் மூலமாக மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம், மற்றும், Dhanu Aluminum Fabricators(கொழும்பு) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இன்று திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் காணப்படும் நாவற்சோலை, இரணைக்கேணி, வீரஞ்சோலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் 30 குடும்பங்கள் தகரத்திலான கொட்டில், மற்றும் ஓலைக் குடிசையில் வாழும் மக்கள் தமது இருப்பிடங்களில் இம்மழைக்காலத்தில் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் இணங்காணப்பட்ட நிலையில் இக்குடும்பங்கள் 30 இற்கும் இன்று TENT (படங்கு) வழங்கி வைக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உபதலைவர் சகோதரன்.S.S.சீலன் மற்றும் திருகோணமலை மாவட்ட பணியாளர் சகோ.s.மதன் மற்றும், pas.ஸ்டான்லி
ஆகியோர் இணைந்து இவ்வுதவியை நேரடியாக அம்மக்களிடம் கையளித்தனர்.
இது போன்ற உதவிகளை மக்களுக்கு செய்ய எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.