திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் சகோதரி ஜதாங்கனி என்பவருக்கு உணவு பொதிகளையும் ஒரு தொகை பணத்தையும் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா கிராமத்தில் வசிக்கும் சகோதரி ஜதாங்கனி என்பவருக்கு உணவு பொதிகளையும் ஒரு தொகை பணத்தையும் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட சகோதரியின் வீடு தீப்பிடித்து எரிந்த உடைமைகள் அழிந்த காரணத்தினால் இக் குறிப்பிட்ட உதவி அவசரமாக வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை சுவிஸ் தேசத்தில் வசிக்கும் சகோதரன் நீதன் என்பவரால் வழங்கப்பட்டது.
இவ் உதவியை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் உப தலைவர் சீலன் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்படுத்தினர்.
மற்றுமொரு உதவி முல்லைத்தீவில் வழங்கப்பட்டும் இருந்தது.
மருத்துவ உதவியாக அவ் உதவியினை நீதன் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.