இருபது குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (13.11.20) முல்லைத்தீவு செல்வபுரம் மற்றும் குமுளமுனை பகுதியைச் சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் வாழும் இருபது குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை அமரர் வீரசிங்கம் ஆறுமுகநாதன் நினைவாக லண்டனில் வசிக்கும் அவரது மனைவி ஜமுனா அவர்களால் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட உதவியினை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் பொருளாளர் ஜஸ்மன் ஆகியோர் உரியவர்களிடம் கொண்டு சேர்த்தனர்.
அத்துடன் ஓர் கால் இழந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக கடற்தொழில் செய்வதற்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது