திருகோணமலை மூதூர் பகுதியில் 100 குடும்பங்களிற்கு TENT வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம், மக்கள் நல்வாழ்வு மையம், மற்றும் மக்களுக்கு உதவும் மக்கள் நல்வாழ்வு மன்றம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரே களத்தில் பணியாற்றிய ஓர் உயரிய சந்தர்ப்பம்…..
ஆம் திருகோணமலை மூதூர் பகுதியில்
பாட்டாளி புரம், நல்லூர், நீலாங்கேணி, வீரமாநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 100குடும்பங்கள் மண் கொட்டில்களாலான, மற்றும் ஓலைக் குடிசையில் வாழும் மக்கள் தமது இருப்பிடங்களில் இம்மழைக்காலத்தில் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் இணங்காணப்பட்ட நிலையில் இக்குடும்பங்கள் 100 இற்கும் இன்று TENT (படங்கு) வழங்கி வைக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உபதலைவர் சகோதரன்.S.S.சீலன் மற்றும் கிழக்கு மாகாண பணியாளர்களும்
மக்களுக்கு உதவும் மக்கள் மன்ற பணியாளர் வின்சன் பிரசன்னாவும் இணைந்து இவ்வுதவியை நேரடியாக அம்மக்களிடம் கையளித்தனர்.
இதுபோன்ற உதவிகளை மக்களுக்கு செய்ய எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.