முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி தென்னியங்குளம் பகுதியில் கோழி கூடு மற்றும் கோழிகள் அதற்குரிய தீவனம் என்பன வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (09.10.20) முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி தென்னியங்குளம் பகுதியில் கோழி கூடு மற்றும் கோழிகள் அதற்குரிய தீவனம் என்பன வழங்கப்பட்டது.
சகோதரிகளான விதவைகள் இருவருக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த உதவியினை IMAGINE COMPASSION INTERNATIONAL PVT Ltd AUSTRALIA நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
உதவிகளை வழங்கிய நிறுவனத்தினருக்கும் ஒருங்கிணைப்பு செய்த குழுவினருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இது போன்ற உதவிகள் தேவையான நிலையில் தாயக மண்ணில் பலர் இருப்பதால் நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்