வயோதிப தம்பதியினருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
இன்றைய தினம் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் யாருடைய உதவியும் இன்றி இருந்த வயோதிப குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ஊர் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. (கோழி கூடு, கோழி தீனி, நீர் மற்றும் உணவுப் பாத்திரங்கள் உள்ளடங்களாக)
இதற்கான நிதி உதவியை jaffna Royal granite Corner நிறுவனம் மற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரம் லண்டன் கிளை மக்கள் ஆகியோர் வழங்கினர்.
- இவ் உதவியை எமது நிறுவன செயலாளர் பிரவீன் உரியவர்களிடம் கொண்டு சேர்த்தார்.