ஜீவ ஊற்று அன்பின் இல்லம் 14வது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (01.09.2020) மட்டக்களப்பு சவுக்கடி பகுதியை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றிற்கு ஜீவ ஊற்று அன்பின் இல்லம் திட்டத்தின் கீழ் புதிய இல்லம் ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் பயன்பாட்டுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத் தருணத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான நிதி உதவியை கனடா தேசத்தில் வசிக்கும் சகோதரன் Benu Jude தம்பதியினர் தமது திருமண ஆண்டை முன்னிட்டு வழங்கியிருந்தனர்.
குறிப்பிட்ட குடும்பத்தினர் மாற்றுத்திறனாளியாகிய மகனை கொண்டவர்கள். இதனால் அவர்கள் பட்ட வேதனை சொல்வதற்கரியது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் தனது ஆறாவது ஆண்டை நிறைவு செய்து ஏழாவது ஆண்டிற்குள் காலடி பதித்திருக்கும் இந் நாட்களில் பல பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
அதிகமான உதவிகளை எதிர்பார்த்து தாயக உறவுகள் இருப்பதால் நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.