அவசர நிவாரண உதவியும் புதிதாக வீடும் நிர்மாணிக்கப்பட்டது
“கண்ணீர் துடைக்கும் பயணம்”
மட்டக்களப்பு பகுதியில் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினரின் துயர நிலைமையினை அறிந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் இரவோடு இரவாக அமைப்பின் பணியாளர்களை அனுப்பி உடனடி நிவாரண உதவியாக ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன் இவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது.
பார்ப்போரை கண் கலங்க செய்யும் இக் குடும்பத்தினருக்கு இவ் உதவியை நியூசிலாந்து தேசத்தில் வசிக்கும் ஜெயக்குமார் குடும்பத்தினர் உடனடியாகவே வழங்கியிருந்தனர்.
மேலும் இது போன்று எம் மண்ணில் தாயக உறவுகள் பலர் இருப்பதால் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.