115 விதவைகள்,தாய்மாருக்கு உலர் உணவு நிவாரணம் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது
இரட்னசிங்கம் ஜெயசோதி அம்மாவின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி அக்கராயனில் 20 குடும்பங்களுக்கும், வட்டக்கச்சியில்25 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பில் 20 குடும்பங்களுக்கும் வவுனியாவில் 20 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொருட்களும் கிளிநொச்சியில் 30 விதவைகள் மற்றும் தாய்மாருக்கு சாரியும் வழங்கி வைக்கப்பட்டது.
தாயார் தனது பிறந்த தினத்தை இந்த விதவைகள் மற்றும் தாயார்களுடன் மிக சிறப்பாக கொண்டாடியதை ஜீவ ஊற்று அன்பின் கரம் ஐரோப்பிய மற்றும் இலங்கை குழுவினர் மிகுந்த நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தாயாரையும் உதவிகள் வழங்கப்பட்ட சகோதரிகளையும் ஆண்டவர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக..
மேலும் இது போன்று நீங்களும் உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்