1300 குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவுக்கு மேலாக ஜீவ ஊற்று அன்பின் கரம் உதவிகள்
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் அன்றாடம் கூலி வேலை செய்து தங்களுடைய வாழ்வை கொண்டு நடத்தும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக எமது நிறுவனத்தினால் எம்மால் முடிந்தளவு உலர்உணவு பொதிகளை வழங்கியுள்ளோம். இன்னமும் உதவிகளை உறவுகளுக்கு வழங்கவுள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 1300 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகளை வழங்கியுள்ளோம். இதற்காக இதுவரை எமது புலம்பெயர் உறவுகள் 1169000 ரூபா நிதியுதவி செய்துள்ளனர். அவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னமும் அதிகமான புலம்பெயர் உறவுகள் நிதி உதவி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள எமது பணியாளர்கள் இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் உதவிகளை சிறப்பாக உரியவர்களின் கரங்களிற்கு கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தூற்றுகிறார்கள், விமர்சிக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் வீட்டிலிருந்துகொண்டே செய்கிறார்கள்.
காதில் போட்டுக்கொள்ளாமல் எம்மால் முடிந்த மனிதாபிமானத்தை களத்தில் இறங்கி நாம் எம் உறவுகளிடம் கொண்டு சேர்க்கிறோம், எதிர்காலத்திலும் எம்மால் முடிந்ததை கொண்டு சேர்ப்போம்.