தனிமையில் வாழ்ந்த வயோதிபருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
இன்றைய தினம் 05.03.2020 தேராவில் விசுவமடு பகுதியில் நோயினால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டிருந்த வயோதிபர் ஒருவருக்கு வாழ்வாதாரமாக ரூபா 20000 பெறுமதியில் கோழிக்குஞ்சுகள் கோழி தீனி, மருந்துகள் உள்ளடங்களாக வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை செய்துதவிய லண்டன் காக்கும் கரங்கள் ஸ்தாபகர் அன்ரன் யூதாகரன் வெனிற்றா றோகினி அவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு இன்னமும் ஏராளமான எமது உறவுகள் பல இன்னல்களை எதிர் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். விரும்பினால் நீங்களும் இவ் உன்னத பணியில் இணைந்து கொள்ள முடியும்.