சுய தொழில் திட்டத்தில் பயனாளி ஒருவருக்கு 30000 ரூபாய் வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின்கரம் ஊடாக இன்றைய நாளில் (27.02.2020) திருகோணமலை நிலாவெளி பகுதியில் மிகவும் வறுமையினாலும் குடும்ப தலைவன் கடுமையாக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பல இன்னல்களை எதிர் கொண்டு வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றிற்கு குளிர் பானங்களை தயாரித்து விற்பனை செய்வதற்கான உதவி தொகையாக ரூபா 30000 வழங்கப்பட்டது.
தங்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஜேர்மனியில் உள்ள ஆ.ஆருஜன்
ஆ.ஆரவி ஆகியோர் இதற்குரிய நிதி உதவியை செய்திருந்தார்கள். இவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நீங்களும் உங்கள் பிறந்த தினங்கள் அல்லது ஏதேனும் விசேட தினங்களில் இவ்வாறு எமது உறவுகளுக்கு உதவி கரம் நீட்ட விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.