வயதான தாய்மார்களுக்கு சாறிகளும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் இன்றைய நாளில் (01.02.2020) முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஜீவ ஊற்று அன்பின் கரம் தாயக மண்ணில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பல செயற்திட்டங்களை நிறைவேற்றி வந்தது.
எனினும் தற்போதைய நிலையில் நிறுவன வளர்ச்சியின் காரணமாகவும் பல மக்களின் கோரிக்கையின் நிமித்தமாகவும் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எமது நிர்வாக செயலாளர் பிரவீண் அவர்கள் தேசியக்கொடியையும், எமது நிர்வாகத்தலைவர் பாஸ்டர் தயாளினி ஜோன் அவர்கள் ஜீவ ஊற்று கொடியையும் ஏற்றி வைத்தனர். அதைத் தொடர்ந்து எமது நியூசிலாந்து இணைப்பாளர் சகோதரன் ரவி அவர்கள் நாடா வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார் அத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அனைத்து நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர். அவர்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
இனி வரும் நாட்களில் மக்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்றும் தமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்பதையும்அறியத் தருகிறோம்.