ஒன்பதாவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் பயனாளிக்கு வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை மற்றும் ஊடாக இன்றைய நாளில் (11.01.2020) ஜீவ ஊற்று அன்பின் ஒன்பதாவது இல்லம் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வழங்கப்பட்டது.
இவ் உதவியை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் Newzealand இணைப்பாளர் ஊடாக,
மக்கள் நல்வாழ்வு மையம் ஸ்தாபகர் செ.முருகானந்தன் வழங்கி இருந்தார்.
உதவியினை அறிந்ததும் சீக்கிரமாக அதற்கான பண ஏற்பாடுகளை வழங்கிய செ.முருகானந்தம் அவர்களுக்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இக் காரியங்களை சிறப்புற வடிவமைத்து நிறைவேற்றிய ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்களுக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் இந்த இல்லத்தினை மக்கள் நல்வாழ்வு மையம் நிறுவன தலைவர் K.Ranjan மற்றும் செயலாளர் K. Suntharaselvan ஆகியோர் திறந்து வைத்து பயனாளியிடம் வழங்கி வைத்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.