வீதியில் இருந்தவர்களுக்கு விருந்து வழங்கி புதிய ஆண்டை ஆரம்பித்தது ஜீவ ஊற்று அன்பின் கரம்
நீதிமொழிகள் 25;21
…….பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு: அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
இன்றைய புது வருட நாளில் திருகோணமலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக புதிய ஆண்டில் இன்றைய நாளில் (01.01.2020) இல் பணியின் தொடக்கமாக சிறார்களுக்கும், வீதியில் இருந்தோருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் திருகோணமலை பணியாளர்களால் மேற்படி நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
எங்கள் பணிகளுக்காக தொடர்ந்து ஜெபிக்கிற உங்களை கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
எமது புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.