முள்ளிவாய்க்காலில் வீடு வீடாக சென்று நிவாரணம் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய தினம் (07.12.2019) முள்ளி வாய்க்கால் பகுதியை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஓயாமல் பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் உயரிய நோக்கோடு ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்கள் விரைந்து சென்று முள்ளிவாய்க்கால் பகுதியில் உதவிகள் வழங்கி வைத்தனர்.
நேரடியாக குறிப்பிட்ட இடத்தினை பார்வையிட்டு மக்களை இனங்கண்டு வீடு வீடாக சென்ற எமது சகோதரர்கள் உதவிகளை உரியவர்களிடம் சேர்த்தனர்.
குறிப்பிட்ட பகுதி மக்கள் கண்ணீருடன் நன்றிகளை நல்கினர்.
இவ்வுதவியை வழங்க அனுசரணை வழங்கி வைத்த நெதர்லாந்தை சேர்ந்த சகோதரிக்கும் எமது பணியாளர்களுகநன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற உதவிகள் தேவையான நிலையில் பல மக்கள் உள்ளனர் விரும்புவோர் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிகளை வழங்க முடியும்.