வெள்ள அனர்த்த நிவாரண உதவிகள் ஸ்கந்தபுரம் பகுதியில் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில்(21:10:2019) கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பிரதேசத்தில் உள்ள ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த முப்பது குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்கள்
மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்த இந்த மக்களை அடையாளம் கண்டு கொண்ட ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்கள் இந்த உதவியை குறிப்பிட்டவர்களுக்கு வழங்க சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.
இந்த உதவியை புலம் பெயர் நாட்டில் வாழும் நடராசா மற்றும் மோசே குடும்பத்தினர் வழங்கினர்.
இப்போது பெய்து வரும் கனமழை காரணமாக அநேக மக்கள் எமது தாயக மண்ணில் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் விரும்பும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவ ஜீவ ஊற்று அன்பின் கர குழுவினர் எப்போதும் தயாராக உள்ளனர்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும். அதன் ஸ்தாபகர் சகோதரன் ஜெஜீவன் ஆவார் . அவரை எப்போதும் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்க முடியும்.
சகோதரன் ஜெஜீவன்
0032465999897
Jeevaootru.com