மட்டக்களப்பில் நாப்பது குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய தினம் (13.10.2019) மட்டக்களப்பு கிரான் பகுதிக்கு உட் பட்ட முறுத்தானை கிராமத்தில் 40 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது*.
இந்த உதவியை லண்டன் தேசத்தில் வசிக்கும் சகோதரன் மோகன் சகோதரி செரின் தம்பதியர் வழங்கினர். இத் தம்பதியர் திருமணமாகி முதல் குழந்தை கிடைத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டவர் *இரண்டாவதாக ஆண் குழந்தையை* கொடுத்தார்
*குழந்தை நாத்தானியேல் இன்று தேவ ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றார். அந்த மகிழ்ச்சியான தருணத்தை எம் தாயக சகோதரர்களுடன் இணைந்து கொண்டாட இந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் விரும்பிய படியால் இந்த நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது*.
ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக குழந்தை நாத்தானியேலை நாம் ஆசீர்வதிப்பதுடன் குடும்பத்தினரையும் வாழ்த்தி தேவ ஆசீர்வாதங்கள் தொடர்ந்தும் பெருகட்டும் என ஜெபிக்கிறோம்.
நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பினால் தயவு செய்து எம்மை தொடர்பு கொள்ளவும். உங்களது மகிழ்ச்சியான தருணங்களை எமது தாயக சகோதரர்களுடன் இணைந்து பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்