ஏழாவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் திறக்கப்பட்டு கையளிக்கப்பட்டது
குறிப்பிட்ட குடும்பத்தினர் ஐந்து பிள்ளைகளுடன் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்தவர்கள் இவர்களை அடையாளம் கண்டு கொண்ட ஜீவ ஊற்று அன்பின் பணியாளர்களது அர்ப்பணிப்புடன் கூடிய துரித செயற்பாட்டின் மூலம் ஜீவ ஊற்று அன்பின் ஏழாவது இல்லம் கட்டி வேலைகள் பூரணமாக முடிவுற்று உள்ளது.
இவ் உதவியை நியூசிலாந்து ஜீவ ஊற்று அன்பின் கரம் இணைப்பாளர் வழங்கியிருந்தார். அத்துடன் புதிதாக கட்டப்பட்ட இந்த இல்லத்தை நெதர்லாந்து சுவிஷேச சபையின் பிரதான போதகர் சாமுவேல் திறந்து வைத்தார்
குறிப்பிட்ட போதகர் சாமுவேல் அவர்கள் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் ஆலோசகராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இதற்காக பிரயாச பட்ட ஒவ்வொரு உள்ளங்களையும் தேவன் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!