கிளிநொச்சி ஜெயபுரத்தில் இருபது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக கடந்த 27.08.2019 அன்று கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ்வசிக்கும் 20 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
குறிப்பிட்ட பிரதேசமானது அதிகமாக பின்தங்கிய ஓர் கிராமமாகும். ஜீவ ஊற்று பணியாளர்கள் அங்கே கடந்து சென்று நிலைமைகளை அவதானித்து விரைந்து செயற்பட்டதனால் இவ்உதவி குறிப்பிட்டவர்களுக்கு
சென்றடைய கூடியதாக இருந்தது.
இது போன்ற உதவிகள் தேவையான நிலையில் நம் நாட்டில் பலர் உள்ளனர். உதவ விரும்பவோர் தயவாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
சகோதரன் விபோஷனனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த குறிப்பிட்ட நிவாரணம் வழங்கபட்டது. தேவன் தாமே ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!