மாற்று திறனாளி ஒருவருக்கு புதிய வீடு அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் தனது ஐந்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் (02.09.2019) கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் புதிதாக வீடு நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
குறிப்பிட்ட சகோதரன் ஓர் காலை இழந்த மாற்று திறனாளி ஆவார். இந்த உதவியை நியூசிலாந்து தேசத்தில் வசிக்கும் சகோதரன் முருகா அண்ணா வழங்கினார்.
இந்த திட்டத்தினை ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் சகோதரன் ஜஸ்மன் தலைமை தாங்கி நெறிப்படுத்தினார். அத்துடன் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிர்வாக உறுப்பினர் போதகர் சுந்தர் மற்றும் மாவட்ட தலைவர் றமேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
6 வது ஆண்டின் ஆரம்பத்தில் பல திட்டங்கள் தீட்டப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு செயற்படுத்தும் இந்த நாட்களில் நீங்களும் எம்முடன் கரம் கோர்த்து தாயக மக்களின் மேன்மைக்காக பாடுபட அன்புடன் அழைக்கின்றோம்.
தேவன் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!!