மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு மறுபடியும் ஓர் நேரடியான சந்திப்பும் உதவியும்
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று இலங்கை மட்டக்களப்பு சீயோன் சபையில் நடந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தினரையும் நினைவில் கொண்டு ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை பணிக்கூடாக நெதர்லாந்து சுவிஷேச தரிசன சபையும் (30000 விகிதம் இருவருக்கும்) இன்னும் ஐந்து ஐக்கிய சபை உறுப்பினர்களும் இணைந்து (10000 விகிதம் 13 பேருக்கு)
நேற்று எமது அமைப்பின் இலங்கை நிர்வாக உறுப்பினார்களால் நேரில் சென்று பார்வையிட்டு வழங்கப்பட்டது.
குறிப்பிட்டவர்களுக்கு அவ் உதவி பெரும் தேவைகளின் மத்தியில் சிறு பொறுப்பை நிறைவேற்ற உதவியாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வுதவியை மனப்பூர்வமாக செய்த அனைத்து பிள்ளைகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.
அவர்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள் !!!