மலையகத்திலும் கால் பதித்தது ஜீவ ஊற்று அன்பின் கரம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் தற்போது ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. மென்மேலும் தனது பணியை விஸ்தரிக்க திட்டங்கள் தீட்டப்பட்டு அவை அனைத்தும் சரியான நேரத்தில் செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மலையக மக்களின் வாழ்க்கை தராதரத்தினை உயர்த்த தன்னாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
அதன் படி இன்றைய நாளில் மலையக பகுதியில் பதினைந்து வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்த உதவியை லண்டன் மற்றும் பிரான்ஸ் பகுதியில் வசிக்கும் ஒரு சில சகோதரர்கள் தமது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கினார்கள்.
இதன் பிரகாரம் இந்த புதிய திட்டங்கள் இன்னும் வேகத்துடன் உற்சாகமாக செயற்பட நீங்களும் எம்முடன் இணைந்து பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்
தேவன் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!