முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை
முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மற்றுமொர் மகத்தான பணி ஆரம்பமாகவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி அளம்பில் பகுதியில் மூன்றாம் கட்ட இலவச தையல்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட உப்புமாவெளி அளம்பிலை தமது தலைமை காரியாலயமாக கொண்டுள்ள ஜீவ ஊற்று அன்பின் கரமானது பல மகத்தான பணிகளை இன மத மொழி பேதமின்றி இலங்கையில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
இதனடிப்படையில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி உதவியில் மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலகத்தில் தையல் பயிற்சி நெறியானது ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி நெறியானது தையற்கலையில் நிபுணத்துவமிக்கவர்களை கொண்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி நெறிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமே வழங்குகின்றனர்.இக் கற்கை நெறிக்கு ஜீவ ஊற்று அன்பின் கரத்தோடு கைகோர்த்து #மிஷன்மெயில் நெதர்லாந்து அனுசரனை வழங்குகின்றனர்.
இதனடிப்படையில் இரண்டாம் கட்ட தையல் பயிற்சிகளை இனிதே நிறைவு செய்த யுவதிகள் இன்று (22/06/2024)வெளியேறியதையடுத்து மூன்றாம் கட்ட தையல் பயிற்சி நெறியானது ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்தங்கள் இன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகள் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கு தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள பாரிய ஊன்று கோலாக இருந்த ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.