கிளிநொச்சியில் இருபது ஆண்டுகளாக நீரினைப் பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இருபதாண்டு துன்பம் இருபத்துநான்கு மணி நேரத்தில் நீங்கியது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்கின்றன.
நீரின்றி அமையாது உலகு
வறுமை ஒரு மனிதனை வாட்டலாம் ஆனால் வறுமையே வாழ்வாக போனால் யாது செய்யலாம் ? வறுமையிலும் கொடியது குடிப்பதற்கு நீரில்லாமல் துடிப்பதுதான். எம் தேசம்
நாலாபுறமும் நீர் நிறைந்து காணப்பட்ட போதிலும் நீரைப் பெறுவதற்கு எம்மவர் படும் பாடு ஐயையோ!!! சொல்லமுடியாத் துயரம்!
இவ்வாறானவொரு துன்பவெள்ளத்தில் இருபதாண்டுகளாக மூழ்கித் துடித்த குடும்பம் ஒன்றின்பால் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உதவும் கரம் நீட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 08.05.2024 அன்று கிளிநொச்சியில் இருபது ஆண்டுகளாக நீரினைப் பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை இலண்டனில் வாழ்கின்றதான பாபு அண்ணன் (*Babu அண்ணன் UK 🇬🇧 )வழங்கியுள்ளார்.
இவருக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
அத்தோடுகூட வாவு அண்ணன் வழங்குகின்ற இரண்டாவது ஆழ் குழாய்க் கிணறு என்பதும் குறிப்பிடத்தக்கது