வவுனியா சிவபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 25 ஆவது இல்லம் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. குறிப்பிட்ட உதவியினை நெதர்லாந்து தேசத்தில் உள்ள வெளிச்ச வீடு தேவாலய போதகர் மற்றும் விசுவாசிகள் வழங்கி இருந்தனர்.
உதவிகளை வழங்கிய சபையினருக்கும் இந்த உதவி திட்டத்தை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
குறிப்பிட்ட இல்லத்திற்கான நிதி உதவியினை நியூசிலாந்து மக்கள் நல்வாழ்வு மையம் வழங்கியிருந்தது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மூலம் மூன்று வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நியூசிலாந்து மக்கள் நல்வாழ்வு மையம் இன்றைய நாளில் ஓர் ஆண்டை பூர்த்தி செய்து இரண்டாவது ஆண்டில் காலடி பதிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இல்லம் கையளிப்பு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மையம் சார்பாக அதன் இலங்கை பிரதிநிதிகள் ரஞ்சன், சுந்தரசெல்வன் ஆகியோரும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக பொருளாளர் ஜஸ்மன், உப தலைவர் சீலன், வவுனியா மாவட்ட இணைப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர் சுந்தர் ஆகியோருடன் கிழக்கு மாகாண இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
உதவிகளை வழங்கிய நிறுவனத்தினருக்கும் இந்த உதவி திட்டத்தை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.