முல்லைதீவு மாவட்டத்தில் 95 ஆவது இல்லம் பயனாளிகளிற்கு வழங்கப்பட்டது
SQM FOUNDATION இனது நிரந்தர வீடு பயன்பெறுநரிடம் வழங்கிவைப்பு. புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம்அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. அந்தவகையில் இன்றைய நாளிலும் (02.04.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 95 ஆவது இல்லமும் அதேசமயம் SQM JANITORIAL SERVICES INC AND SQM FOUNDATION CANADA இனது 16 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் தீர்த்தக்கரை எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன்வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான நிதி உதவியினை வழங்கியிருந்தவர் கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் ஆவார். கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றஉதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.…