திருமறைக் கலா மன்றத்தினருக்கான கவின் கலைக்கூடம் திறப்பு விழா 2025
SQM Foundation – Canada நிதி உதவியில் திருமறைக் கலா மன்றத்தினருக்கான கவின் கலைக்கூடம் திறப்பு விழா 2025.
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்போடு கைகோர்த்து பணியாற்றிக் கொண்டு வருகின்ற SQM Founder பாக்கியராஜ் கமலநாதன் அண்ணா அவர்களின் உன்னதமான நிதி உதவியில் நாம் பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இப் பணிகளை நாம் பிரதேசம் சமயங்கள் கடந்து மேற்கொண்டு வருகின்றோம்.
ஈழத்தின் கிழக்கே மீன் பாடும் தேன் நாடாம் மட்டுமா நகரில் பிறந்து கடந்த 25 ஆண்டுகளாக கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்ற தொழில் அதிபர் பாக்கியராசா கமலநாதன் அண்ணா அவர்களின் நிதி உதவியில் வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி அறிவியல் நகரில் திருமறை கலா மன்றத்திற்கான மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வானது கடந்த10.01.2025 அன்று இடம் பெற்றது.
இந்த இனிதான நல்ல நிகழ்வில் SQM Founder பாக்கியராஜ் கமலநாதன் அண்ணா அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த இனிதான நல்ல நிகழ்வில் திருமறை கலா மன்ற நிருவாக உறுப்பினர்கள், அருட்தந்தையர்கள், கிராம அபிவிருத்தி சார்ந்த அங்கத்தவர்கள், பயன்பெறும் சிறுவர்கள் மற்றும் பிரதேச மக்கள் குறிப்பாக ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பணியாளர்கள் என அநேகர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ்விடத்தில் SQM அமைப்பின் ஸ்தாபகர் அவர்கள் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து ஆற்றுகின்ற சேவைகளை குறிப்பிட்டாக வேண்டியது தலையாயக் கடமையாய் இருக்கின்றது.
அந்த வகையில்,
♟️இதுவரையும் 30 க்கு மேற்பட்ட நிரந்தர இல்லங்களை நிர்மாணித்து வழங்கியிருக்கின்றார்கள்.
♟️அநேக இல்லங்களுக்கு அடிக்கல் வைத்து வேலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
♟️ கற்றல் உபகரணங்கள் வழங்கி மாணவர்களின் கற்றலை மேம்பட செய்கின்றார்.
♟️பதினான்கு வருடங்களாக தன்னுடைய பிரதேசத்தில் பரிசளிப்பு விழாவை நடாத்தி வருகின்றார்.
♟️ வவுனியா பகுதியில் அரசினால் உதவி வழங்கி முடிவுறாமல் இருந்த அநேக வீடுகளை தன்னுடைய சொந்த நிதிகளை கொண்டு முடிவுறுத்திக் கொடுத்துள்ளார்.
♟️இவ்வருடம் செயற்கை கால் பொருத்துகின்ற மாபெரும் செயற்பாட்டை ஆரம்பிக்க இருக்கின்றார்.
♟️விளையாட்டரங்கு அமைத்தல்
♟️வாழ்வாதார உதவிகள்.
♟️அனர்த்தங்கள் ஏற்படுகின்ற பொழுது பல்வேறு விதமான உதவிகள்.
இவ்வாறு இவரது பணிகள் எண்ணில் அடங்காதவை.
இக்கொடை வள்ளல் இன்னும் அநேக பணிகளை மேற்கொள்ள ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
நன்றி