மட்டக்களப்பு மாவட்டத்தில் 109 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 05.01.2025 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 109 ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்மானது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேற்றாத்தீவு பிரதேத்தில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் சுவிஸ் தேசத்தின் செயற்பாட்டாளர் றொஷான் மற்றும் ஆபிரிக்க தேசத்தில் வாழ்கின்ற அலெக்ஸ் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
இவ் இனிதான நிகழ்வில் எம்மோடு கைகோர்த்து பல்வேறு சேவைகளையாற்றுகின்ற SQM Founder கமலநாதன் அண்ணா மற்றும் அவரது துணைவியரும் கலந்து சிறப்பித்ததோடு இல்லத்தினை பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைத்தனர்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய சகோ.றொஷான் , சகோ.அலெக்ஸ் ஆகியோருக்கு
எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.