திருமுருகண்டி இந்து வித்தியாலயத்தில் 111 மாணவர்களிற்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அமைப்பின் கரங்கள் நிறுவனத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருமுருகண்டி இந்து வித்தியாலய மாணவர்களில் 111 குழந்தைகளுக்கான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
போரின் வடுக்களை சுமந்து திரிகின்ற சமூகத்தில் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூட முடியாத அளவு மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த வகையில் இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்கள் அவர்கள் தமது குழந்தைகளின் கல்வி தேவைகளை பூரணமாக நிவர்த்தி செய்ய முடியாத அளவிற்கு மிகச் சிரமப்படுகின்ற காரணத்தால் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க 111 மாணவர்களுக்கான புத்தகப் பைகள் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
புத்தகப் பைகளுக்கான நிதி அனுசரணையினை செல்வராசா விக்டோரியா தங்கராசா திரேசம்மா மற்றும் முத்து மாணிக்கம் ராஜசிங்கம் ஆகியோர் வழங்கி இருந்தனர் . இந்த ஏழை குழந்தைகளின் கல்வியை மீட்டெடுப்பதற்கான பயணத்தில் எங்களோடு இணைந்து கொண்ட இந்த நல்லுள்ளங்களுக்கு குழந்தைகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.