ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாண்டு நிறைவு விழா
பத்தாண்டுகள் இப் பாரினில் மகத்தான பணியாற்றி பதினோராம் ஆண்டில் தடம் பதித்துள்ளது ஜீவ ஊற்று அன்பின் கரம். பத்தாண்டுகள் என்பது ஒரு மைல்கல். அதை எட்டித்தொட்டிட பட்ட பாடுகள் பல .
தனியொருவனாய் இறை உதவியோடு அல்லலுறும் மக்களை கண்ணோக்கி சொந்த நிதியில் ஆரம்பித்த இவ் மாபெரும் பணி இன்று Misson mail Netherland, SQM Foundation Canada போன்ற நிறுவனங்களின் உதவியோடு வீறு நடை போடுகின்றது. வடகிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் பணியையாற்றுகின்றோம்.
பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் வெளி தேசத்தில் இருந்து ரவி அண்ணன், லோரன்ஸ் அண்ணன் ஆகியோரும் வவுனியா பிரதேச செயலகத்தைச் சேர்ந்த Mr.S.Shanmuganathan Asst. Director of Planning, Mr.N.Bavananthan Development Officer ,Mrs. M. Sabitha, SK VLOG YouTuber Kirusna Nederland, Theogu Jesuthasan, Theogu Marianayagam, Jayanthan Janzjya ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.