ஜீவ ஊற்று நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இலங்கை வட மாகாணத்தின் முல்லை தீவு மாவட்டத்தில் ஜீவஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் நடத்தும் தொழிற்பயிற்சி கூடத்தில் தையல் பயிற்சியினை பெற்று வெளியேறிய முதலாம் மற்றும் இரண்டாம் அணிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவின் பல பிரதேசங்களில் பாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்கள் மற்றும் தொழில் வாய்ப்பு இன்றி தொழில் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் என்று பலருக்கு இந்த தொழிலுக்குடம் பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.
அத்துடன் நான்காவது அணிக்கான பயிற்சி நெறிகள் ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் துரிதமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.