வவுனியாவில் 151 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய மனிதநேயமிக்க பணிகளை இலங்கையின் பல பாகங்களில் மேற்கொண்டு வருகின்றது
பல தடைகள், ஏமாற்றங்கள் என பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.
இன்றையநாளிலும் பத்தாவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்ற நாம் புதிய இல்லத்தை நிர்மாணிப்பதற்கான முதல்கட்ட செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளோம்.
அந்தவகையில் இன்றைய நாளிலும் வவுனியா மாவட்டத்திலுள்ள ஓமந்தைப் பகுதியில் பெண்தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்திற்கு நிரந்தர இல்லத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 151 ஆவது இல்லமாகும்.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான தாயார் சற்சிதானந்தம் சொர்ணலக்ஸ்மி ,குமரகுலசிங்கம் ராகவன், ராகவன் விஜயா, மற்றும் பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்றதான அஸ்வினி ஜதுர்ஷன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்…….